விவசாயத்துறை அமைச்சகம்
கடற்பாசி சார்ந்த அங்ககப் பொருட்கள், உயிரி ஊக்கிகளை ஊக்குவித்தல்
Posted On:
26 JUL 2024 6:24PM by PIB Chennai
விவசாயிகளுக்கு நல்ல தரமான உயிர் ஊக்கிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு, 1985-ம் ஆண்டு உரக் கட்டுப்பாடு ஆணை சட்டத்தின் கீழ் உயிரி ஊக்கிகளை இணைத்தது. உயிர் ஊக்கிகளின் எட்டு வகைகளில் கடற்பாசி ஒன்றாகும். எஃப்சிஓ-வின் கீழ், கடற்பாசியின் விவரக்குறிப்புகளை வரையறுக்கவும், அதன் தரத்தை ஒழுங்குபடுத்தவும் மத்திய அரசு அதிகாரம் பெற்றுள்ளது.
மீன்வளத் துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகம் மூலம் நாட்டில் கடற்பாசி சாகுபடி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் (PMMSY) கீழ், 98.75 கோடி ரூபாய் மத்திய அரசின் பங்களிப்புடன், 193.56 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடற்பாசி வளர்ப்பை மேம்படுத்துவதற்காக கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், ஆராய்ச்சி - மேம்பாட்டு நிறுவனங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் பின்வருவன அடங்கும்:
*தமிழ்நாட்டில் ஒரு கடற்பாசி பூங்கா, டையூவில் ஒரு கடற்பாசி வங்கி.
*ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் கடற்பாசி விதை உற்பத்தி, வணிக முக்கியத்துவம் வாய்ந்த கடற்பாசிகளை சாகுபடி செய்தல், கடற்பாசி வளர்ப்பிற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள், விழிப்புணர்வு பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுதல்.
*குஜராத்தில் உள்ள கட்ச் வளைகுடாவிலும் (கோரி க்ரீக் பகுதி) கடற்பாசி சாகுபடி ஊக்குவிக்கப்படுகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
PLM/DL
(Release ID: 2037973)
Visitor Counter : 43