கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கரையோரக் கப்பல் போக்குவரத்து நடைமுறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
प्रविष्टि तिथि:
26 JUL 2024 1:07PM by PIB Chennai
கடலோரக் கப்பல் போக்குவரத்து, ஒருங்கிணைந்த நீர்வழித் திட்டம், சாகர்மாலா திட்டத்தின் துறைமுக இணைப்பு ஆகிய திட்டங்களின் கீழ், நாட்டில் மொத்தம் ரூ.3634 கோடி மதிப்பிலான 70 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கடலோர கப்பல் போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து, துறைமுக இணைப்பு ஆகியவற்றில் மொத்தம் 8 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் திட்ட மதிப்பு மொத்தம் ரூ. 215 கோடி. இதற்கு இதுவரை ரூ. 122 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ. 95 கோடி விடுக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சகம், சாகர்மாலா திட்டத்தின் கீழ், மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் ஐஐடி-யில்ல் உள்நாட்டு, கடலோர கடல்சார் தொழில்நுட்ப மையத்தை ரூ. 69.20 கோடி திட்ட மதிப்பீட்டில் உருவாக்கி வருகிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
PLM/DL
(रिलीज़ आईडी: 2037940)
आगंतुक पटल : 60