கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
சாகர்மாலா திட்டங்கள்
प्रविष्टि तिथि:
26 JUL 2024 1:29PM by PIB Chennai
சாகர்மாலா என்பது இந்தியாவின் 7,500 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையையும் 14,500 கிலோ மீட்டர் நீள பயணிக்கக்கூடிய நீர்வழிகளையும் சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான திட்டமாகும். அது மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சகத்தின் முதன்மையான மத்திய திட்டமாகும். சாகர்மாலா திட்டத்தின் கீழ், துறைமுக உள்கட்டமைப்பு திட்டங்கள், கடலோர கப்பல் நிறுத்தும் திட்டங்கள், கடலோரப் பகுதிகளில் சாலை ரயில் திட்டங்கள், மீன் துறைமுகங்கள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், கடலோர சமூக மேம்பாடு, கப்பல் முனையம், ரோ-பாக்ஸ் படகு சேவைகள் போன்ற திட்டங்களுக்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கப்பல் துறை அமைச்சகம் நிதி உதவி வழங்குகிறது.
இதன் நிதியுதவியின் கீழ் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை -22. அனுமதிக்கப்பட்ட நிதி - ரூ. 513 கோடி
சாகர்மாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரூ. 1259 கோடி மதிப்பில் 17 துறைமுகங்களுக்கான இணைப்பு மேம்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் 16 துறைமுகங்கள் ரூ. 860 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்படுகின்றன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
PLM/DL
(रिलीज़ आईडी: 2037938)
आगंतुक पटल : 78