கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடல்சார் பாதுகாப்புக்கான முயற்சிகள்

प्रविष्टि तिथि: 26 JUL 2024 2:44PM by PIB Chennai

துறைமுகங்களில் பாதுகாப்பிற்காக பின்வரும் புதிய முயற்சிகளும் தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:

*வணிகக் கப்பல் (கப்பல்கள், துறைமுக வசதி பாதுகாப்பு) விதிகள் 2024, மத்திய அரசால் 19 ஜூன் 2024 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் பாதுகாப்பு உடன்படிக்கையின் ஏற்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளன. 

*பெரிய துறைமுகங்கள், தற்போதுள்ள அணுகல் கட்டுப்பாட்டு முறையை நவீனப்படுத்த, ரேடியோ அதிர்வெண் அடையாள முறை, பயோமெட்ரிக் முறை ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மேலும், அனைத்து பெரிய துறைமுகங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலக் கடற்கரையோரத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்த பின்வரும் நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன:

*கடலோர பாதுகாப்புத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. கட்டம் I, 2005-2011 காலகட்டத்திலும் கட்டம் II, 2012-2020 காலகட்டத்திலும் அனைத்து கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கேரளாவில் 18 கடலோர காவல் நிலையங்கள், 02 படகுத்துறைகள் நிறுவப்பட்டன. 24 இடைமறிப்பு படகுகள், 26 நான்கு சக்கர வாகனங்கள், 56 மோட்டார் சைக்கிள்களை வாங்கப்பட்டன.

*கடலோர பாதுகாப்பு மறு ஆய்வு தொடர்பான வழிகாட்டுக் குழுவின் வழிகாட்டுதலுக்கு இணங்க, கேரளாவின் கடலோர பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார்.

சாகர்மாலா என்பது கப்பல், துறைமுகங்கள் அமைச்சகத்தின் மத்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். சாகர்மாலா திட்டத்திற்கு நிதி அமைச்சகம் வழங்கும் நிதி நிபந்தனையற்ற நிதிகளே தவிர, திட்டங்கள் வாரியாக, மாநில வாரியாக அல்ல. ஒப்புதல்கள்,  திட்ட செயல்பாடுகளின் அடிப்படையில், நடப்பாண்டில் நிதி விடுவிக்கப்படுகிறது. முந்தைய 2023-24 நிதியாண்டில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் கேரள மாநிலத்திற்கு ரூ.6.62 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

*****

PLM/DL
 


(रिलीज़ आईडी: 2037936) आगंतुक पटल : 68
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP