விவசாயத்துறை அமைச்சகம்
விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம்
प्रविष्टि तिथि:
26 JUL 2024 2:40PM by PIB Chennai
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்ய ஒரு ஆய்வை நடத்தியது. இதில் 651 மாவட்டங்களில் 573 மாவட்டங்களின் ஆபத்தையும் பாதிப்பையும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் மதிப்பிட்டுள்ளது. மொத்தம் 109 மாவட்டங்கள் 'மிக அதிகம் பாதிக்கப்படக் கூடியவை என்றும், 201 மாவட்டங்கள் அதிக பாதிக்கப்படக்கூடியவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பருவநிலை மாற்ற கணிப்புகளின்படி 2050 ஆம் ஆண்டில் மானாவாரி நெல் மகசூலை 20% ஆகவும், 2080ஆம் ஆண்டில் 47% ஆகவும் குறைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பாசன நெல் மகசூல் 2050 ஆம் ஆண்டில் 3.5% ஆகவும், 2080 ஆம் ஆண்டில் 5% ஆகவும், கோதுமை மகசூல் 2050 ஆம் ஆண்டில் 19.3% ஆகவும், 2080 ஆம் ஆண்டில் 40% ஆகவும் குறையக்கூடும் என்று அந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணிக்க மாறுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 151 பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களில் உள்ள 448 கிராமங்களில், பருவநிலை நெகிழ்திறன் தொழில்நுட்பங்களான பருவநிலை நெகிழ்திறன் ரகங்கள் செயல்விளக்கம், நேரடி விதைப்பு நெல் (டிஎஸ்ஆர்), திறன் வாய்ந்த நீர்ப்பாசன அமைப்புகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டின் 651 விவசாய முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில் மாவட்ட வேளாண் தற்செயல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் வேளாண் துறை மீது ஏற்படும் தாக்கத்தை சமாளிக்க நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இது மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது. அதாவது மானாவாரி பகுதி மேம்பாடு , பண்ணை நீர் மேலாண்மை, மண் சுகாதார மேலாண்மை ஆகியவை ஆகும்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
PLM/DL
(रिलीज़ आईडी: 2037907)
आगंतुक पटल : 84