சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் மருத்துவ சுற்றுலா

Posted On: 25 JUL 2024 2:58PM by PIB Chennai

சுற்றுலா அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகள் மூலம் இந்தியாவில் சுற்றுலாவை முழுமையான முறையில் மேம்படுத்துகிறது. தற்போதைய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மருத்துவச் சுற்றுலா உட்பட பல்வேறு சுற்றுலா வகைகள் மூலம் இந்திய சுற்றுலாவை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற விரும்புவோருக்காக அதிகாரப்பூர்வ தளத்தைத் தொடங்கியுள்ளதாக சுகாதார, குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வரும் சர்வதேச மருத்துவ பயணிகளின் தகவல்கள் மூலம் நோயாளியின் பயணத்தை நெறிப்படுத்த இந்த தளம் உதவுகிறது. https://healinindia.gov.in/ என்ற இந்த இணையதளம் இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினரின் வருகையை எளிதாக்கும் வகையில், 167 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் மின்னணு மருத்துவ விசா, மின்னணு மருத்துவ துணை நபர் விசா (இ-மெடிக்கல் விசா, இ-மெடிக்கல் அட்டெண்டன்ட் விசா) வசதிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில்  மருத்துவ நோக்கங்களுக்காக இந்தியாவுக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் விவரம் வருமாறு:

2020 -183,000

2021 -304,000

2022 -475,000

2023 - 635,000

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

---

PLM/DL


(Release ID: 2037769) Visitor Counter : 59


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP