மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

பிஎல்ஐ திட்டத்தின் கீழ் 32 நிறுவனங்களின் மொத்த முதலீடு ரூ. 8,282 கோடி

Posted On: 24 JUL 2024 5:51PM by PIB Chennai

பெரிய அளவிலான மின்னணு உற்பத்திக்கான பிஎல்ஐ எனப்படும் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை  திட்டத்தின் கீழ் 32 நிறுவனங்கள் ரூ. 8,282 கோடி ஒட்டுமொத்தமாக முதலீடு செய்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. எஸ். ஜிதின் பிரசாத் தெரிவித்துள்ளார்,

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ள அவர்,   27 நிறுவனங்கள் மொத்தமாக   ரூ.464.66 கோடியை தகவல் தொழில்நுட்ப வன்பொருளுக்கான பிஎல்ஐ 2.0 திட்டத்தின்  கீழ் முதலீடு செய்துள்ளன என்றார்.

2019 ஆம் ஆண்டு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் மின்னணு  நிறுவனங்களுக்காக அறிவிக்கப்பட்டது. பெரிய அளவிலான மின்னணு சாதனங்ளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குபிஎல்ஐ திட்டம் 01.04.2020 அன்று அறிவிக்கப்பட்டது.

 வன்பொருளுக்கான பிஎல்ஐ திட்டம் 03.03.2021 அன்று அறிவிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப வன்பொருளுக்கான திட்டம் 2.0  கடந்த 2023 மே மாதம் 29 அன்று அறிவிக்கப்பட்டது என்ற தகவலையும் அமைச்சர் தெரிவித்தார்பெரிய அளவிலான மின்னணு பொருட்களை உற்பத்தி செய்தவற்கான பிஎல்ஐ திட்டத்தின் கீழ், மொத்தம் 32 நிறுவனங்கள் 11,324 கோடி ரூபாய் உறுதியான முதலீட்டுடன் அங்கீகரிக்கப்பட்டது. இதன் வாயிலாக 10,70,000 கோடி ரூபாய் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

தகவல் தொழில்நுட்ப வன்பொருளுக்கான பிஎல்ஐ திட்டத்தின் கீழ், மொத்தம் 14 நிறுவனங்கள் ரூ.2,517 கோடி உறுதியான முதலீடு மற்றும் ரூ.1,60,751 கோடி உற்பத்தி இலக்கை எட்டவேண்டும் என்று வரையறைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலையும் மக்களவையில் அமைச்சர் தெரிவித்தார்.

----

VK/DL


(Release ID: 2037755) Visitor Counter : 33


Read this release in: English , Hindi_MP , Hindi