பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அங்கன்வாடி ஊழியர்களின் திறனை மேம்படுத்தும் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 24 JUL 2024 6:06PM by PIB Chennai

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளை சரியாக பராமரிப்பதற்கும் அவர்களுக்கு கல்வி மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்குவதற்கும் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக 2023 ஆண்டு மே 10 ஆம் தேதி போஷன் பி பதாய் பி என் முன்முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக  மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி கூறினார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது இதனைத் தெரிவித்த அவர்,  2024 ஜூன் மாத நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 11,364 மாநில அளவிலான முதுநிலைப் பயிற்சியாளர்கள் (சிடிபிஓக்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் கூடுதல் வளப் பணியாளர்கள்) மற்றும் 1877 அங்கன்வாடி பணியாளர்கள் போஷன் பி பதாய் பியின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர் என்றார்.

 சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 இன் போஷன் பி பதாய் பி' முன்முயற்சி 2023 மே 10ஆம் தேதி தொடங்கப்பட்டது. அங்கன்வாடி மையங்களில் குழந்தை பருவ பராமரிப்பு மற்றும்  குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்தவும்,  நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட உயர்தர உள்கட்டமைப்புகளை கொண்டு கற்றல் மையங்களாக    அங்கன்வாடி மையங்களை மாற்றவும் குழந்தைகளின் படைப்பற்றாலை அதிகரிப்பதற்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க இத்திட்டம் உதவுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

--- 

VK/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2037754) வருகையாளர் எண்ணிக்கை : 121
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Hindi_MP , Marathi