சுரங்கங்கள் அமைச்சகம்
தாது வளங்களை பாதுகாப்பதற்கான உத்தி
Posted On:
24 JUL 2024 4:48PM by PIB Chennai
நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பயன்பாட்டிற்கு மிகவும் அவசியம் என்று கருதப்படும் கனிமங்களை பாதுகாப்பாக விநியோகம் செய்வதற்கும் முக்கிய துறைகளில் கனிமங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இன்று மக்களவையில் அவர், எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கு அவசியமான கனிமங்களின் உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாக்க, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957 (எம்எம்டிஆர் சட்டம்), மற்றும் கடல் பகுதிகள் கனிம (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 2002 (ஓஏஎம்டிஆர் சட்டம்) ஆகியவை திருத்தப்பட்டுள்ளது என்றார். இந்த திருத்தங்கள் முக்கியமான கனிமங்கள் தொடர்பான சுரங்கங்கங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் உயர் தொழில்நுட்ப மின்னணுவியல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற துறைகளில் நாடு தன்னிறைவு அடைவதை இது உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
எம்எம்டிஆர் சட்டத்தின் கீழ் 24 முக்கியமான மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கனிம சுரங்கங்களை ஏலம் விடுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்றுவரை 14 தொகுதிகள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கனிம வளங்களின் இருப்பு மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலியை உறுதி செய்வது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்யும் என்றும் அமைச்சர் திரு. கிஷன்ரெட்டி கூறினார்.
****
Vk/DL
(Release ID: 2037717)
Visitor Counter : 40