விவசாயத்துறை அமைச்சகம்

பயிர் விளைச்சலை அதிகரிக்க துல்லிய விவசாயம் மற்றும் தொழில் நுட்ப பயன்பாடு

Posted On: 26 JUL 2024 2:40PM by PIB Chennai

ஜிபிஎஸ், சென்சார் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி, மண்ணின் தன்மை, ஈரப்பத அளவு மற்றும் பயிர் ஆரோக்கியம் பற்றிய தரவுகளை அடித்தள அளவில்  சேகரித்து, இடம் சார்ந்த மேலண்மையைப் பின்பற்றுவதே துல்லிய வேளாண்மையின் நோக்கமாகும்.

இதுபோன்று சேகரிக்கப்படும் தரவுகள், உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்கள் மற்றும் தண்ணீரை துல்லியமான அளவு பயன்படுத்துவதில், விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும். வளங்களை இயன்ற அளவு பயன்படுத்தி கழிவுகளை குறைப்பதும்  இதன் முக்கிய அம்சமாகும்.

தொலையுணர்வு தொழில்நுட்பங்கள் மூலம், பயிர் ஆரோக்கியத்தை கண்காணிப்பதோடு, பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய் தாக்குதலை முன்கூட்டியே அடையாளம் காண, கேமராக்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் பயன்பாடு, பயிர் உற்பத்தியை அதிகரிக்க அவசியமானதாக கருதப்படுகிறது என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2037406

***

MM/RS/DL



(Release ID: 2037706) Visitor Counter : 7


Read this release in: English , Urdu , Hindi