ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மண்ணின் விளைச்சல் திறனை பாதுகாக்கும்
Posted On:
26 JUL 2024 2:51PM by PIB Chennai
லூதியானாவில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மேற்கொண்ட நீண்ட கால உர பரிசோதனையில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, மண்ணின் விளைச்சல் திறனை (மேம்பட்ட உயிரியல் செயல்பாடு கொண்ட கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்ளடக்கியது) பாதுகாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. ரசாயன உரங்களை சமச்சீரற்ற அளவில் பயன்படுத்தினால், அது மண்ணின் விளைச்சல் தன்மையை குறைத்து விடும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம், பஞ்சாபில் 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அரிசி-கோதுமை பரிசோதனை, மண்ணில் உள்ள ரசாயனங்களில் எந்தவித எதிர்மறை விளைவையும் ஏற்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது. அதேபோன்று, ரசாயன உரங்களை உரிய முறையில் சமச்சீரான அளவில் பயன்படுத்தினால், மண்ணின் விளைச்சல் திறனில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இயற்கை உரங்களை குறைவாகவும், ரசாயன உரங்களை சமச்சீரற்ற அளவிலும் பயன்படுத்துவதால் தான், மண் விளைச்சல் தன்மையை இழக்க நேரிடுவதாக ஆய்வு முடிவுகள் கூறுவதாக மத்திய ரசாயன உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2037422
***
MM/RS/KR/DL
(Release ID: 2037630)
Visitor Counter : 47