இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இந்தியா முழுவதும் உள்நாட்டு விளையாட்டுகள் ஊக்குவிக்கப்படுகின்றன
Posted On:
25 JUL 2024 4:01PM by PIB Chennai
கேலோ இந்தியா திட்டத்தின் துணை அங்கமான 'ஊரக மற்றும் சுதேச/பழங்குடியினர் விளையாட்டுகளை ஊக்குவித்தல், குறிப்பாக நாட்டில் கிராமப்புற மற்றும் சுதேச, பழங்குடியினர் விளையாட்டுகளின் மேம்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மல்லகம்பு, களரிப்பயட்டு, கட்கா, தாங்-டா, யோகாசனம், சிலம்பம் போன்ற உள்நாட்டு / பாரம்பரிய விளையாட்டுகள் இந்த அம்சத்தின் கீழ் மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த விளையாட்டுகள் ஆண்டுதோறும் கேலோ இந்தியா, பல்கலைக்கழக இளைஞர் விளையாட்டுகளின் ஒரு பகுதியாக இருக்கின்றன.
'விளையாட்டு' ஒரு மாநில விஷயமாக இருப்பதால், பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவித்தல் மற்றும் அவற்றின் போட்டிகளை நடத்துவது உள்ளிட்ட விளையாட்டை மேம்படுத்துவதற்கான பொறுப்பு முதன்மையாக அந்தந்த மாநில / யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது. முக்கியமான இடைவெளிகளை நிரப்புவதன் மூலம் மட்டுமே மத்திய அரசு அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.உள்நாட்டு விளையாட்டுக்கள் மற்றும் விளையாட்டுக்களில் பங்கேற்கும் விளையாட்டு திறமைகளை மேலும் சென்றடைய இந்த அமைச்சகம் மேற்கொண்ட பல்வேறு முன்முயற்சிகள் பின்வருமாறு:
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் பாரம்பரிய விளையாட்டுகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
வ.
எண்
|
விளையாட்டு
|
விளையாட்டு வீரர்கள் எண்ணிக்கை
|
ஆண்கள்
|
பெண்கள்
|
1.
|
மல்லகம்பு
|
2417
|
1301
|
1116
|
2.
|
களரிப்பயட்டு
|
1100
|
650
|
450
|
3.
|
தாங்-டா
|
2700
|
1500
|
1200
|
4.
|
கட்கா
|
3430
|
1990
|
1440
|
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இதனைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2036941)
SMB/AG/KR
(Release ID: 2037554)
Visitor Counter : 53