சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பனிப்பாறைகள் உருகுவதால் இயற்கை பேரழிவு ஏற்படும் அபாயம்

Posted On: 25 JUL 2024 1:32PM by PIB Chennai

பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகி வருவதை அரசு தீவிரமாக கவனித்து வருகிறது. புவி அறிவியல் அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் உட்பட பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள் மூலம் நிதியுதவி பெறும் பல்வேறு இந்திய நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் ஆய்வுகளை அரசு மேற்கொண்டுள்ளது.

உதாரணமாக, இமாச்சலப் பிரதேசத்தின் சந்திரா படுகையில் உள்ள ஆறு பனிப்பாறைகளை கண்காணிப்பதற்கும், காலநிலை மாற்றத்திற்கு பனிப்பாறைகளின் மாறுபட்ட நிலையைப் புரிந்துகொள்வதற்கும், கீழ்நிலை நீரியலில் அதன் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கும், புவி அறிவியல்  அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனமான தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தால்  ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. சந்திரா படுகையில் உள்ள இரண்டு பெரிய பனிப்பாறை ஏரிகள் (சமுத்ரா தபு மற்றும் கெபாங் காத்) கடந்த ஐந்து தசாப்தங்களில் (1971-2022) அவற்றின் பரப்பளவில் கணிசமான விரிவாக்கத்தை  இந்த ஆய்வு காட்டியுள்ளது. இது பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளத்திற்கான ஆபத்து இருப்பதைக் காட்டுகிறது.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் நிபுணத்துவ அமைப்புகள் அளித்த தகவல்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சில பெரிய பனிப்பாறை தொடர்பான பேரழிவுகள் வருமாறு:

 

 

 

மாநிலம்/ யூனியன் பிரதேசம்

பனிப்பாறை தொடர்பான பேரழிவுகளின் எண்ணிக்கை

ஆண்டுகள்

உத்தரகண்ட்

2

2013, 2021

லடாக்

1

2021

லடாக்

1

2023

 

இமாச்சலப் பிரதேச மாநில அரசு வழங்கிய தகவல்களின்படி, கடந்த ஒரு தசாப்தத்தில், பனிப்பாறை உருகுவதன் விளைவாக மாநிலத்தில் இதுபோன்ற பேரழிவு எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு. கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2036724)

SMB/AG/KR




(Release ID: 2037537) Visitor Counter : 65


Read this release in: English , Urdu , Hindi