சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பருவநிலை மாற்றத்தின் தாக்கம்
Posted On:
25 JUL 2024 1:32PM by PIB Chennai
பருவநிலை மாற்றம் தொடர்பாக அரசுகளுக்கிடையேயான குழுவின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி, பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றம் புவி வெப்பமடைதலை ஏற்படுத்தியுள்ளது. 2011-2020 தசாப்தத்தில் 1850-1900 நிலைக்கு மேல் உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
2023-ம் ஆண்டில் காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தியாவின் மூன்றாவது அறிக்கையில் தேசிய தகவல்தொடர்பு, வெள்ளம் மற்றும் வறட்சி முதல் வெப்ப அலைகள், பனிப்பாறை உருகுதல் வரை முழு அளவிலான பருவநிலை மாற்ற தாக்கங்களை இந்தியா அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், பருவநிலை மாற்றம் தொடர்பான மாநிலங்களின் குறிப்பிட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, தேசிய பருவநிலை மாற்றம் குறித்த செயல் திட்டங்களை தயாரித்துள்ளன. பருவநிலை மாற்றம் குறித்த குழுக்களை செயல்படுத்தும் பொறுப்பு அந்தந்த மாநிலங்களைச் சார்ந்ததாகும்.
பருவநிலை மாற்றத்திற்கான தேசிய தழுவல் நிதியத்தின் கீழ், 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ரூ.847.48 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சுற்றுச்சூழல், வனம் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு. கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2036722)
SMB/AG/KR
(Release ID: 2037529)