கலாசாரத்துறை அமைச்சகம்
தேசிய கலாச்சார நிதியம்
Posted On:
25 JUL 2024 6:27PM by PIB Chennai
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பது மற்றும் ஊக்குவிக்கும் நோக்கில், அரசு, தனியார் கூட்டமைப்புடன் கூடுதல் ஆதாரங்களை திரட்டும் நோக்கில், அறக்கட்டளை நன்கொடை சட்டம், 1890-ன்கீழ் நவம்பர் 28, 1996-ல் அறக்கட்டளையாக தேசிய கலாச்சார நிதியத்தை அரசு உருவாக்கியது. தேசிய கலாச்சார நிதியத்துக்கு நன்கொடை வழங்குவோர் குறிப்பிட்ட பகுதி/திட்டம் குறித்தும், அதனை செயல்படுத்தும் அமைப்பு குறித்தும் குறிப்பிடலாம். அதோடு, கலாச்சாரத் துறையுடன் தொடர்புடைய பணிகளுக்கு நிதியிலிருந்து கிடைக்கும் வட்டியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேசிய கலாச்சார நிதியத்தின் முக்கிய நோக்கங்கள் சிலவற்றைக் காணலாம்:
நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு, பராமரிப்பு, ஊக்குவிப்பு ஆகியவற்றுக்கு நிதியை பயன்படுத்துவது அல்லது:
கலாச்சார நிர்வாகிகள் மற்றும் சிறப்பு நிபுணர்களை உருவாக்குவது மற்றும் பயிற்சி அளிப்பது
புதிய மற்றும் சிறப்பு பாதுகாப்பு மையங்களை உருவாக்குவது அல்லது இருப்பதை பயன்படுத்துவதற்காக ஏற்கனவே உள்ள அருங்காட்சியகங்களில் கூடுதல் இடங்களை அளிப்பது மற்றும் புதிய அருங்காட்சியகங்களைக் கட்டுவது
தற்போதைய சூழலில் அழிந்துபோன மற்றும் முக்கியத்துவத்தை இழந்த கலாச்சார பொருட்களை ஆவணப்படுத்துவது.
தேசிய கலாச்சார நிதியத்தின் சிறப்பு அம்சங்கள்:
கலாச்சார அமைச்சரின் தலைமையிலான குழுவால் தேசிய கலாச்சார நிதியம் கையாளப்படும் மற்றும் நிர்வகிக்கப்படும். இதில், கொள்கைகளை வகுப்பதற்காக அதிகபட்சம் 25 உறுப்பினர்கள் இருப்பார்கள்.
கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் செயற்குழு இருக்கும். இதில், கொள்கைகளை செயல்படுத்துவதற்காக அதிகபட்சம் 11 உறுப்பினர்கள் இருப்பார்கள்.
தேசிய கலாச்சார நிதியத்துக்கு வழங்கப்படும் நன்கொடைக்கு வருமானவரி சட்டம், 1961-ன் பிரிவு 80ஜி (2)-ன்படி, 100 சதவீத வரிவிலக்கு பெற முடியும்.
ஆண்டுக் கணக்குகளை இந்திய தலைமைக் கணக்காளர் தணிக்கை செய்வார்.
தேசிய கலாச்சார நிதியத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்திய தொல்லியல் துறை திட்டங்கள் தாமதமாவதைத் தடுக்க, இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநரின்கீழ் திட்ட அமலாக்கக் குழு அடிக்கடி கூடி, திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதாவது தாமதம் ஏற்பட்டால், அதனை சரிசெய்யும்.
தேசிய கலாச்சார நிதியத்தின் செயல்பாடுகளை மத்திய அரசு அடிக்கடி மறுஆய்வு செய்யும்.
இந்தத் தகவல்களை மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
SK/KR
***
(Release ID: 2037394)