மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
புனேயில் 21-வது கால்நடை கணக்கெடுப்புக்கான மண்டல பயிற்சி முகாம்
Posted On:
25 JUL 2024 5:20PM by PIB Chennai
மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை, குஜராத் மாநிலத்துடன் இணைந்து "மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கான 21-வது கால்நடை கணக்கெடுப்பு மென்பொருள் (மொபைல், வலை பயன்பாடு / தகவல் பலகை), குறித்த மண்டல பயிற்சி முகாமை நடத்தியது.
2024 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை திட்டமிடப்பட்டுள்ள 21 வது கால்நடை கணக்கெடுப்புக்காக மகாராஷ்டிரா, டாமன், டையூ மற்றும் தாத்ரா, நாகர் ஹவேலியைச் சேர்ந்த மாநில, மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு இந்தப் பயிற்சி முகாம் மகாராஷ்டிராவின் புனேயில் இன்று நடைபெற்றது.
கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா, இந்தியப் பொருளாதாரத்தில் கால்நடைத் துறையின் தாக்கம், கால்நடை துறை உற்பத்தியின் உலகளாவிய வர்த்தகத்தின் அடிப்படையில் இந்தியாவின் நிலை ஆகியவை குறித்த கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்டார். கால்நடை கணக்கெடுப்பு நடைமுறையில் பெண்களின் பங்கேற்பையும், மேய்ச்சல் சமூகங்களின் உதவியையும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2037027
***
SMB/RS/DL
(Release ID: 2037169)
Visitor Counter : 37