சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் 14 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் 7225 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 25 JUL 2024 1:11PM by PIB Chennai

குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண 2019 அக்டோபர் மாதம் முதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் உட்பட விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு  மத்திய அரசின் சார்பில் நிதித் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

முன்னதாக இத்திட்டம் 2023 மார்ச் வரை ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது இத்திட்டம் 31.03.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிர்பயா நிதி மூலம் ரூ.1207.24 கோடியுடன் மொத்தம் 1952.23 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி, ஏழு உதவிப் பணியாளர்களின் சம்பளம், அன்றாட செலவுகள் ஆகியவற்றிற்கு இத்தொகை ஒதுக்கப்படுகிறது.

உயர்நீதி மன்றங்கள் மூலம் கிடைத்த தகவலின்படி 2024 மே மாதம் வரை நாட்டில் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 410 சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் உட்பட 755 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன.  இவற்றின் மூலம் 2,53,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் போக்சோ நீதிமன்றங்கள் உட்பட 14 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன.  மொத்தம் 7225 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

இத்தகவலை மத்திய சட்டத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 2036701)

IR/AG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2036942) வருகையாளர் எண்ணிக்கை : 158
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP