உள்துறை அமைச்சகம்
இணையவழி குற்றங்கள்
Posted On:
24 JUL 2024 5:13PM by PIB Chennai
இணையவழி குற்றங்களை விரிவான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் கையாள்வதற்கான நடைமுறையை வலுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான இணையவழி குற்றங்களையும் ஒருங்கிணைத்து கையாள்வதற்காக 'இந்திய இணைய வழி குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தை' மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
மேவாட், ஜம்தாரா, அகமதாபாத், ஹைதராபாத், சண்டிகர், விசாகப்பட்டினம், குவஹாத்தி ஆகிய இடங்களில் ஏழு கூட்டு சைபர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2023-ம் ஆண்டில் ஐதராபாத், அகமதாபாத், குவஹாத்தி, விசாகப்பட்டினம், லக்னோ, ராஞ்சி, சண்டிகர் ஆகிய இடங்களில் கூட்டு இணைய வழி குற்றத்தடுப்பு ஒருங்கிணைப்பு குழுகளுக்காக ஏழு பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து வகையான இணையதள குற்றங்கள் தொடர்பான சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக, 'தேசிய இணைய வழி குற்றப் புகார் இணையதளம்' (https://cybercrime.gov.in) தொடங்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் புகாரளிக்கப்பட்ட இணையவழி குற்ற சம்பவங்கள், அவற்றை முதல் தகவல் அறிக்கைகளாக மாற்றுதல், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட மாநில,யூனியன் பிரதேச சட்ட அமலாக்க முகமைகளால் கையாளப்படுகின்றன.
இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பந்தி சஞ்சய் குமார் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
***
(Release ID: 2036411)
IR/AG/KR
(Release ID: 2036795)
Visitor Counter : 59