கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சகாரா குழுமத்தின் டெபாசிட்தாரர்களுக்கு ரூ.362 கோடி திருப்பித் தரப்பட்டுள்ளது

Posted On: 24 JUL 2024 5:30PM by PIB Chennai

சகாரா குழுமத்தின் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பித்தர உச்சநீதிமன்றம்  29.03.2023 அன்று உத்தரவிட்டதன் அடிப்படையில், 18.07.2023 அன்று https://mocrefund.crcs.gov.in என்ற இணையப் பக்கத்தை மத்திய அரசு தொடங்கியது. இதன் மூலம், சகாரா குமுத்தின் பயனாளிகளுக்கு டெபாசிட் தொகை திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.

டெபாசிட்தாரர்கள்  முறையான அடையாள ஆவணத்தை இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததன் மூலம், ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. டெபாசிட்தாரர்களின் விண்ணப்பங்களில் குறைபாடுகள் ஏதும் இருப்பின், அதுபற்றி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, மீண்டும் விண்ணப்பங்களை அளிப்பதற்கு 15.11.2023 அன்று இணையப் பக்கம் ஒன்று ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

சகாரா குழுமத்தின் கூட்டுறவு சங்கங்களில் டெபாசிட் செய்த  4,20,417 டெபாசிட்தாரர்களுக்கு 16.07.2024 நிலவரப்படி, ரூ.362.91 கோடி திருப்பித் தரப்பட்டுள்ளதாக  மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.

***

(Release ID: 2036424)

SMB/RS/KR


(Release ID: 2036786) Visitor Counter : 55


Read this release in: English , Hindi , Hindi_MP