அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
லடாக்கின் பாறைப்பூச்சு விண்வெளியில் வழக்கமான சூழல் நிலைகளை அடையாளம் காண உதவக்கூடும்
प्रविष्टि तिथि:
24 JUL 2024 3:40PM by PIB Chennai
இந்தியாவின் மிகப் பரந்த குளிர்ப்பிரதேசம் என அறியப்படும் லடாக்கில் உள்ள பாறைகளில் படிந்துள்ள பூச்சு (வார்னீஷ்) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள பீர்பால்சானி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் இந்த பூச்சு மாதிரி, செவ்வாய் கோளில் மேற்கொள்ளப்பட்ட ரோவர் ஆய்வுகளில் கண்டறியப்பட்டது போலவே, இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த பாறைப்பூச்சு பற்றி டாக்டர் அம்ரீத்பால் சிங் சட்டா, டாக்டர் அனுபம் சர்மா ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். இவர்களின் ஆய்வு கட்டுரை விண்வெளி சார்ந்த அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. தொன்மையான சுற்றுச்சூழல் ஆவணங்களுக்கு சான்றளிப்பதாக உள்ளது என்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய ஆய்வு, எதிர்காலத்தில் இஸ்ரோ மேற்கொள்ளும் செவ்வாய் கோள் ஆய்வு உட்பட பலவற்றுக்கு பயனுடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
-------------
(Release ID: 2036336)
SMB/RS/KR
***
(रिलीज़ आईडी: 2036761)
आगंतुक पटल : 84