ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டுவரை ரயில்வேயில் 5.02 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்

Posted On: 24 JUL 2024 6:22PM by PIB Chennai

2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டுவரை ரயில்வேயில்  5.02 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, 2.37 கோடி பேர் பங்கேற்ற 2 பெரிய தேர்வுகள் நடத்தப்பட்டது. நாடுமுழுவதும் 221 நகரங்களில் 726 மையங்கள் அமைக்கப்பட்டு, 28.12.2020 முதல் 31.07.2021 வரை  7 கட்டங்களாக நடத்தப்பட்ட கணினி அடிப்படையிலான தேர்வில் 1.26 கோடி பேர் பங்கேற்றனர்.

அதேபோல், 191 நகரங்களில் 551 மையங்கள் அமைக்கப்பட்டு, 17.08.2022 முதல் 11.10.2022 வரை 5 கட்டங்களாக நடத்தப்பட்ட கணினி அடிப்படையிலான தேர்வில் 1.1கோடி பேர் பங்கேற்றனர்.  இத்தேர்வுகளின் மூலம், ரயில்வே பணிக்கு 1,30,551 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இத்தகவலை ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இன்று  எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036481

--------------

IR/RS/DL


(Release ID: 2036520) Visitor Counter : 74


Read this release in: Kannada , Hindi , Hindi_MP , English