திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 1.48 கோடி பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
24 JUL 2024 3:16PM by PIB Chennai
நாட்டில் உள்ள ஊழியர்களுக்கு மறுதிறன் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியம் காரணமாக திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 2015-ம் ஆண்டு பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் ஊழியர்கள் உட்பட இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சி மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி, முன்கற்றல் அங்கீகாரம் வாயிலாக திறன் மேம்பாடு, மறுதிறன் பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகிறது.
பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், குறுகிய கால பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2015-ம் ஆண்டு முதல் 30.6.2024 வரை, 1.48 கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. குறுகிய கால பயிற்சி பெற்ற 56.88 லட்சம் பேரில் 24.3 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இத்தகவலை மத்திய திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்
******
IR/RS/DL
(रिलीज़ आईडी: 2036456)
आगंतुक पटल : 94