குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

விதி எண் 267 குறித்த மாநிலங்களவைத் தலைவரின் விளக்கம்

Posted On: 24 JUL 2024 12:21PM by PIB Chennai

மாண்புமிகு உறுப்பினர்களே,  இந்த விளக்கம் விதி எண் 267 குறித்ததாகும்.  உங்களது நலனுக்காக, விதி எண் 267 குறித்த எனது விளக்கத்தை, உங்களது பார்வைக்காக இன்று பதிவேற்றம் செய்துள்ளேன். இதில், உங்களது கவனத்தைத் தீவிரமாக செலுத்துமாறு, உங்களை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துமாறு நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், ஏனெனில், இது அவையின் ஒவ்வொரு அமர்வின் போதும், தினசரி வழக்கத்தில் ஒன்றாக மாறியுள்ளது. கடந்த 36 ஆண்டுகளில், இந்த நடைமுறை 6 நிகழ்வுகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். அரிதான சூழல்களில் மட்டுமே இந்த நடைமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது.

உங்களது நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரத்தை எடுத்துக் கொள்வதற்காக, அவை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோருவது, மிகவும் கவலைக்குரிய விவகாரம் என்பதை நான் வலியுறுத்தத் தேவையில்லை. நீங்கள் இன்று கொடுத்துள்ள நோட்டீஸ்கள், அவைத்தலைவரின் உத்தரவுக்கு ஏற்றதாக இல்லை என்பதால், அவற்றை அனுமதிக்கவில்லை.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில், விதி எண் 267, ஆறு நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர்களிடமிருந்து நாள்தோறும் இது போன்ற எண்ணற்ற கோரிக்கைகள் வருகிறது. இது ஒரு வழக்கமான நடைமுறையாகவும், பழக்கமாகவும் மாறியுள்ளது. இது ஒரு கேலிக்கூத்தான அம்சமாக, தனக்குத்தானே தரம் தாழ்ந்துள்ளது.  இது குறித்து நேற்று நான் மிகுந்த பொறுப்புடன் விளக்கம் அளித்த போதிலும், அது குறித்து யாரும் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை என்பதால், இதனை உங்களுக்கான இணையதளத்தில் மீண்டும் பதிவேற்றம் செய்துள்ளேன்.

------

(Release ID 2036221)

MM/KPG/KR

 

 

 

***


(Release ID: 2036251) Visitor Counter : 82