பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஓய்வுக்கு முந்தைய ஆலோசனையின் (பி.ஆர்.சி) 54 வது பயிலரங்கை ஜம்முவில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
Posted On:
20 JUL 2024 8:19PM by PIB Chennai
ஜம்மு & காஷ்மீர் முழுவதும் பணியாற்றும் அடுத்த 9 மாதங்களில் ஓய்வு பெறவுள்ள மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஓய்வுக்கு முந்தைய ஆலோசனையின் (பி.ஆர்.சி) 54 வது பயிலரங்கை 19.07.2024 அன்று ஜம்முவில் உள்ள மாநில மாநாட்டு மையத்தில், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையில், ஏற்பாடு செய்தது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அரசின் குடிமக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை மனதில் கொண்டு, துறையால் பல முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இது பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். சமீபத்திய தொழில்நுட்பம், ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது, இதன் விளைவாக பவிஷ்யா, சி.பி.இ.என்.ஜி.ஆர்.ஏ.எம்.எஸ் மற்றும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்கள் போன்ற பல்வேறு தளங்கள் உருவாகியுள்ளன. விடுபட்ட ஊழியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தொடர்பான விதிகள் போன்ற தடையாக இருந்த விதிகளை நீக்கி பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசின் தொலைநோக்குத் திட்டம் 2047, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குறிப்பாக மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறது.
பல்வேறு முதலீட்டு முறைகள், அவற்றின் நன்மைகள் மற்றும் முதலீட்டு திட்டமிடல் பற்றிய விரிவான அமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதிய நிதிகளை சரியான நேரத்தில் முதலீடு செய்ய இது உதவியது. அடுத்த 9 மாதங்களில் ஓய்வு பெறவுள்ள 340 க்கும் மேற்பட்டவர்கள், இந்த பயிலரங்கால் பெரிதும் பயனடைந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2034706
*****
RB/DL
(Release ID: 2034764)
Visitor Counter : 47