மத்திய பணியாளர் தேர்வாணையம்
சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளருக்கான துறைசார் போட்டித் தேர்வு -2023-ன் இறுதி முடிவை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது
Posted On:
19 JUL 2024 8:52PM by PIB Chennai
2024 மார்ச் 16 மற்றும் 17 தேதிகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி நடத்திய சிபிஐ காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பணிக்கான துறைசார் போட்டித் தேர்வு, 2023 மற்றும் 8 ஜூலை 2024 முதல் 11 ஜூலை 2024 வரை நடைபெற்ற ஆளுமைத் தேர்வுக்கான நேர்காணல்களின் அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பில் துணை துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டவர்களின் விவரம்.
மொத்த பணியிடம் - 23
பொதுப் பிரிவினர் - 18
பட்டியல் வகுப்பினர் -03
பழங்குடியினர் - 02
விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு தொடர்பான எந்த தகவலையும், விளக்கத்தையும் வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை பெறலாம்.011-23385271/23381125 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளலாம். முடிவுகள் ஆணையத்தின் இணையதளமான www.upsc.gov.in லும் உள்ளது.
*****
PLM/DL
(Release ID: 2034609)
Visitor Counter : 59