பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

2047ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும 100 நாள் செயல் திட்டம் குறித்து விவாதிக்க, இரண்டு நாள் கலந்துரையாடல் அரங்கத்தை பழங்குடியினர் நல அமைச்சகம் நடத்தியது

Posted On: 20 JUL 2024 10:51AM by PIB Chennai

தொலைநோக்குத் திட்டம் 2047 குறித்தும் அமைச்சகத்தின் 100 நாள் செயல் திட்டம் குறித்தும் விவாதிக்கபழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் இரண்டு நாள் கலந்துரையாடல் அரங்கம் (மந்தன் ஷிவிர்) நிகழ்ச்சியைப் புதுதில்லியில் 2024 ஜூலை 18-19 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்தது.

மாநிலங்களின் பழங்குடியினர் நலத் துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், இயக்குநர்கள், அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். பழங்குடியினர் மேம்பாட்டின் நான்கு முக்கிய பகுதிகளான சுகாதாரம், வாழ்வாதாரம், கல்வி, வன உரிமைகள் ஆகியவற்றில் உள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மத்திய பழங்குடியினர் நல அமைச்சக  செயலாளர் திரு விபு நாயர் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியாக வன உரிமைச் சட்டம், வாழ்வாதாரம், உதவித்தொகை, பிரதமரின் ஜன்மன் திட்டம், ஈஎம்ஆர்எஸ், சுகாதாரத் திட்டங்கள், டிஆர்ஐ திட்டங்கள் குறித்த போன்றவை குறித்த பயிலரங்குகள் நடத்தப்பட்டன.

உதவித்தொகை திட்டங்களை எளிமையாக்குவதற்கான வழிகள் குறித்தும் பங்கேற்பாளர்கள் விவாதித்தனர்.

2 ஆம் நாளில், பிரதமரின் ஜன்மன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது, ஈஎம்ஆர்எஸ் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான செயல் திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது, அரிவாள் செல் நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

PLM/DL



(Release ID: 2034592) Visitor Counter : 38