பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஓய்வுக்கு முந்தைய 54-வது கலந்தாய்வு பயிலரங்கில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்

Posted On: 19 JUL 2024 5:09PM by PIB Chennai

2024-ம் ஆண்டுக்குள் இந்தியாவை  வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் ஓய்வூதியர்களும், மூத்தக் குடிமக்களும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் உள்ள மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஓய்வுக்கு முந்தைய 54-வது கலந்தாய்வு பயிலரங்கில் உரையாற்றிய அவர், தேசக் கட்டமைப்பு பணியில் ஓய்வூதியர்களின் ஆற்றலை ஒருங்கிணைக்கவும், பயனாளிகளின் வாழ்க்கையை எளிதாக்கவும் ஓய்வூதியங்கள் வழங்குவது தொடர்பான  விதிமுறைகளை அரசு எளிமைப்படுத்தியுள்ளது என்றார்.

ஓய்வூதியம் சம்பந்தமான நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தி, காலதாமதங்களை குறைக்க சிறந்த, நவீன தொழில்நுட்பங்களை அரசு பயன்படுத்துகிறது என்று அமைச்சர் கூறினார். ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தவும், இந்திய அணியின் ஒரு பகுதியாக அவர்களை மாற்றவும் அரசு தீர்மானித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில்  காணாமல் போன அரசு ஊழியர்களின் மணமுறிவு பெற்ற  மகள்கள், கணவரை இழந்தோர், இணையர் ஆகியோர் ஓய்வூதியம் பெற தகுதிப்பெற்றவர்கள் என்றும், கடந்த காலத்தில் கடினமாக இருந்த இது, தற்போது எளிதாகியுள்ளது  என்றும் அவர் தெரிவித்தார்.

நல்ல நிர்வாகத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஓய்வுக்கு முந்தைய கலந்தாய்வு பயிலரங்குகள், ஓய்வூதியம், ஓய்வூதியர்கள் நலத்துறை சார்பில் நடத்தப்படுகிறது. ஓய்வூதியர்களின் வாழக்கையை எளிதாக்கும் திசையில் இது ஒரு புரட்சிகர நடவடிக்கையாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034406

***

SMB/RS/DL



(Release ID: 2034458) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi , Punjabi