சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
வட்ட அளவிலான ஓய்வூதிய குறை தீர்க்கும் முகாம்-II, 2024
Posted On:
18 JUL 2024 7:46PM by PIB Chennai
வட்ட அளவிலான ஓய்வூதிய குறை தீர்க்கும் முகாம்- II 20.08.2024 (செவ்வாய் கிழமை) அன்று பகல் 11:00 மணியளவில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொளி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகம் , தமிழ்நாடு வட்டம் சென்னை என்கிற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ (அ) bgt.tn@indiapost.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ 02.08.2024 மதியம் 03:00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் பெறப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு காணொளி காட்சிக்கான இணைப்பு (Meeting link) உரிய நபர்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்படுகின்றது.
***
(Release ID: 2034112)
Visitor Counter : 46