பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

54-வது பணி ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை பயிலரங்கை, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்முவில் உள்ள அரசு மாநாட்டு மண்டபத்தில் 19 ஜூலை 2024 அன்று தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 18 JUL 2024 6:25PM by PIB Chennai

மத்திய அரசின் நல்லாட்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, சமீபத்தில் ஓய்வு பெறவுள்ள மத்திய அரசுப் பணியாளர்களுக்காக, ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை பயிலரங்குகளை, மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. 

அதன்படி, 54-வது பயிலரங்கு, ஜம்முவில் உள்ள அரசு மாநாட்டு மண்டபத்தில் 2024 ஜூலை 19-ம் தேதி நடைபெறவுள்ளது. மத்திய அரசுத்துறைகள் / மத்திய ஆயுத காவல்படைகளிலிருந்து ஓய்வு பெறவுள்ள 250 பேர் இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்ளவுள்ளனர்.  இதனை, மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைக்கவுள்ளார்.

ஓய்வூதியர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கில் இந்தப் புரட்சிகரமான நடவடிக்கை மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பயிலரங்குகளில் ஓய்வூதியர்களுக்கான பலன்கள் மற்றும் ஓய்வூதிய ஒப்பளிப்பு நடைமுறைகள் குறித்த தகவல்கள் எடுத்துரைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2034058

***

MM/AG/DL


(रिलीज़ आईडी: 2034094) आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP