வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஐ.ஐ.எஃப்.டி-யில் எம்.பி.ஏ (சர்வதேச வணிகம்) மற்றும் எம்.பி.ஏ (வணிக பகுப்பாய்வு) படிப்புகளை வர்த்தக செயலாளர் தொடங்கி வைத்தார்

Posted On: 16 JUL 2024 8:08PM by PIB Chennai

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் (ஐ.ஐ.எஃப்.டி) அதன் இரண்டு ஆண்டு எம்.பி.ஏ (சர்வதேச வணிகம்) மற்றும் இரண்டு ஆண்டு எம்.பி.ஏ (வணிக பகுப்பாய்வு) திட்டங்களின் தொடக்க விழாவை புதுதில்லியில் நடத்தியது. இந்திய அரசின் வர்த்தகத் துறை செயலாளரும், ஐ.ஐ.எஃப்.டியின் வேந்தருமான,  திரு. சுனில் பர்த்வால் விழாவைத் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு  சுனில் பர்த்வால், ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள நமது உலகில், சர்வதேச வர்த்தகம் மற்றும் வணிக பகுப்பாய்வு ஆகிய இரண்டும் உலகப் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறினார்.பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலக்கல்லாக  சர்வதேச வர்த்தகம் உள்ளது. அதே நேரத்தில், வணிக பகுப்பாய்வு, நிறுவனங்கள் செயல்படும் முறையை மாற்றுகிறது, தரவு உந்துதல் முடிவெடுப்பதை செயல்படுத்துகிறது மற்றும் செயல்திறன் மற்றும் போட்டித்தன்மையை இயக்கும் நுண்ணறிவுகளை வழங்குகிறது என்று அவர் கூறினார்.

விவாதங்கள் மூலம் சக மாணவர்களுக்கு கற்றல் கலாச்சாரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஐ.ஐ.எஃப்.டி வழங்கும் வாய்ப்புகளை மாணவர்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மாணவர்கள் எல்லைகளுக்கு அப்பால் சிந்திக்க வேண்டும், பன்முகத்தன்மையைத் தழுவ வேண்டும், உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மாறிவரும் காலத்திற்கேற்ப, புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு  அதில் சிறப்படைவதன்  முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033741

******************** 

PLM/BR/KV



(Release ID: 2033872) Visitor Counter : 8


Read this release in: English , Urdu , Hindi