மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை லக்னோவில் 21-வது கால்நடை கணக்கெடுப்பின் மண்டல பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது
Posted On:
16 JUL 2024 6:02PM by PIB Chennai
மத்திய கால்நடை பராமரிப்பு, பால் வளத்துறையும், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால் வள அமைச்சகமும் இணைந்து உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றின் மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு கால்நடை கணக்கெடுப்பு பயிற்சி நிகழ்வை நடத்தின. 21-வது கால்நடை கணக்கெடுப்பு குறித்த மென்பொருள் (செல்பேசி / இணையப் பயன்பாடு / தகவல் பலகை) பயன்பாடு, இனப்பெருக்கம் பற்றிய பயிலரங்காக இது அமைந்தது. லக்னோவில் நடைபெற்ற இந்த நிகழ்வை உத்தரப் பிரதேச கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு தரம் பால் சிங் தொடங்கிவைத்தார்.
அடித்தள நிலையில் திறன் கட்டமைப்பும், விரிவான பயிற்சியும் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த நிகழ்வில் பேசிய திரு தரம் பால் சிங் எடுத்துரைத்தார். இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் கால்நடைகளைக் கொண்டுள்ள மாநிலம் உத்தரப் பிரதேசம் என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்புக்கு கால்நடைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
இத்தகைய கால்நடை கணக்கெடுப்பு என்பது எதிர்கால முன் முயற்சிகளை வடிவமைக்கவும், இந்தத் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளவும் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.
இந்தப் பயிலரங்கைத் தொடர்ந்து மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் தங்களின் மாவட்ட தலைநகரங்களில் கணக்கெடுப்பு நடத்துவோருக்கு பயிற்சி அளிக்க இந்த நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2033710
***
SMB/AG/DL
(Release ID: 2033724)
Visitor Counter : 83