வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
உத்தராகண்ட் மாநிலத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் மின் துறை திட்டங்கள் குறித்தும் மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் ஆய்வு செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 JUL 2024 8:54PM by PIB Chennai
மத்திய மின் துறை, வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் டேராடூனில் உத்தராகண்ட் மாநிலத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் மின்சாரத் துறை திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்தார்.
உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, மத்திய அரசின் மின்துறை அதிகாரிகள், மத்திய அரசின் வீட்டுவசதி அமைச்சக மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாநிலத்தில் மின் பகிர்மானம், மின்துறை மறுசீரமைப்பு, போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு மனோகர் லால், பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் குறுகிய காலத்தில், வீடுகளுக்கு மின்சார வசதி அளித்த மாநில அரசின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி பேசுகையில், மாநிலத்தில் மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.
Release ID: 2033509
PLM/KR
***
(வெளியீட்டு அடையாள எண்: 2033553)
வருகையாளர் எண்ணிக்கை : 92