பாதுகாப்பு அமைச்சகம்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிட்ச் பிளாக் 2024 போர்ப் பயிற்சியில் பங்கேற்கிறது இந்திய விமானப்படை
प्रविष्टि तिथि:
11 JUL 2024 6:57PM by PIB Chennai
பிட்ச் பிளாக் 2024 பயிற்சியில் இந்திய விமானப்படையின் குழு பங்கேற்கிறது. இந்தப் பயிற்சி 2024 ஜூலை 12 முதல் 2025 ஆகஸ்ட் 02 வரை நடைபெறுகிறது.
இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் ஒரு பன்னாட்டுப் பயிற்சியாகும். 'பிட்ச் பிளாக்' என்ற இந்தப் பயிற்சி மக்கள் இல்லாத பெரிய பகுதிகளில் இரவு நேரத்தில் நடத்தப்படும் பயிற்சியாகும். பிட்ச் பிளாக்கின் 43 ஆண்டுகால வரலாற்றில் இந்த ஆண்டுப் பயிற்சி மிகப்பெரியதாகும். இதில் 20 நாடுகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட விமானங்களும் பல்வேறு விமானப்படைகளின் 4400 வீரர்களும் பங்கேற்கின்றனர்.
விமானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கட்டுப்பாட்டாளர்கள், பிற வல்லுநர்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட திறமையான விமானப்படையினர் இந்தியக் குழுவில் பங்கேற்றுள்ளனர்.
இந்த பயிற்சி, பங்கேற்கும் நாடுகளின் திறனை வலுப்படுத்துவதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை வலுப்படுத்தவும் உதவும். இந்திய விமானப்படை இதற்கு முன்பு 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளது.
***
(Release ID: 2032522)
VL/PLM/RR
(रिलीज़ आईडी: 2032619)
आगंतुक पटल : 160