பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொல்கத்தாவில் உள்ள கிழக்குக் கட்டளை தலைமையகத்திற்குப் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சென்றார்

Posted On: 11 JUL 2024 6:12PM by PIB Chennai

பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், 2024 ஜூலை 11 அன்று கொல்கத்தாவில் உள்ள கிழக்குக் கட்டளைத் தலைமையகமான வில்லியம் கோட்டைக்குச் சென்றார். தமது பயணத்தின்போது, விஜய் ஸ்மாரக்கில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய திரு அஜய் சேத், பணியின்போது உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கிழக்குக் கட்டளையின் செயல்பாடு குறித்து திரு சேத்துக்கு விளக்கப்பட்டதுடன் கிழக்குக் கட்டளை தலைமையகத்தின் வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். தேசப் பாதுகாப்பில் வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும், பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் அவர்களின் இடைவிடாத முயற்சிகளையும் இணையமைச்சர் பாராட்டினார்.

 கடினமான நிலப்பரப்பு,மோசமான வானிலை போன்றவை காரணமாக கிழக்குப் பிராந்திய கட்டளை எதிர்கொண்டுள்ள சவால்களையும் தாண்டி இந்த வீரர்களின் பணியை அவர் பாராட்டினார். 

பின்னர், திரு சஞ்சய் சேத் மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் தேசிய மாணவர் படைத் தலைமை இயக்குநரகத்திற்குச் சென்று அந்த இயக்குநரகத்தின் அதிகாரிகள், பயிற்றுநர்கள், மாணவர் படையினருடன் கலந்துரையாடினார்.

தேசக்கட்டமைப்பில் தன்னலமற்ற பணிகளைச் செய்யும் தேசிய மாணவர் படையினரின் பணிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.  மேற்கு வங்கம், சிக்கிம் மாநிலங்களில் தேசிய மாணவர் படை மேற்கொண்டு வரும் பரந்த அளவிலான பயிற்சி, சமூக மேம்பாட்டு முயற்சிகளையும் திரு சஞ்சய் சேத் பாராட்டினார்.

***

(Release ID: 2032499)

VL/PLM/RR


(Release ID: 2032617) Visitor Counter : 47


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP