சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

கொங்கண் ரயில்வேயின் மடுரே-பெர்னெம் பிரிவில் ரயில் சேவை மாற்றிவிடப்பட்டுள்ளது

Posted On: 10 JUL 2024 2:58PM by PIB Chennai

கனமழை காரணமாக பெர்னெம் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், மடுரே-பெர்னெம் பிரிவில் ரயில் சேவையில் கொங்கண் ரயில்வே மாற்றம் செய்துள்ளது.

2024, ஜூலை 10 அன்று அதிகாலை 04.30 மணிக்கு கொச்சுவேலியிலிருந்து புறப்பட்ட கொச்சுவேலி-அமிர்தசரஸ் அதிவிரைவு ரயில் பாலக்காடு, ஈரோடு, ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.

2024, ஜூலை 10 அன்று காலை 10.30 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்ட எர்ணாகுளம் – ஹஸ்ரத் நிஜாமுதீன் மங்கள்தீப் விரைவு ரயில் பாலக்காடு, ஈரோடு, ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, வாடி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.

 

***

SMB/RS/KR



(Release ID: 2032090) Visitor Counter : 25


Read this release in: English