அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

முப்பது மீட்டர் தொலைநோக்கிக்கான அகச்சிவப்பு ஒளிக்கதிர் நட்சத்திர தொகுப்பை உருவாக்க இணையதள அமைப்பை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்

प्रविष्टि तिथि: 09 JUL 2024 6:06PM by PIB Chennai

முப்பது மீட்டர் தொலைநோக்கியின் (டிஎம்டி) அடாப்டிவ் ஆப்டிக்ஸ் (ஏஓ) அமைப்புக்கு விரிவான நட்சத்திர தொகுப்பை உருவாக்குவதற்கான ஒரு புதிய இணையதள அமைப்பை இந்திய விண்வெளிகள் உருவாக்கியுள்ளனர். அடுத்த பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய தொலைநோக்கிகளில் ஒன்றாக தெளிவான வானியல் படங்களை இது வழங்கும்.

டிஎம்டி எனப்படும் முப்பது மீட்டர் தொலைநோக்கித்  திட்டத்தில் இந்தியா ஒரு முக்கிய பங்குதாரராக உள்ளது. இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் (ஐஐஏ) உள்ள இந்தியா டிஎம்டி மையம் தேசிய ஒத்துழைப்புத் திட்டத்தை வழிநடத்துகிறது.

பூமியின் மேற்பரப்பில் உள்ள தொலைநோக்கிகள் வளிமண்டல சிதைவு தொடர்பான சவாலை எதிர்கொள்கின்றன. இது படங்களின் தரத்தை பாதிக்கிறது. டிஎம்டி போன்ற அதிக ஒளித் தன்மை திறன்களைக் கொண்ட தொலைநோக்கிகள் இந்த சவாலை எதிர்கொள்ளும். அவை மேலடுக்கு வளிமண்டல இடையூறுகளைக் கடந்து. உயர்தரப் படங்களை உருவாக்கும்.

பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் (ஐஐஏ) ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பணியாளர்கள் தானியங்கி குறியீட்டை உருவாக்கியுள்ளனர். இது அருகிலுள்ள அகச்சிவப்பு (என்ஐஆர்) ஒளிக்கதிர் நட்சத்திரங்களின் தொகுப்பை உருவாக்கும் இணையதள கருவியாகப் பயன்படும்.

***

(Release ID: 2031841)

SMB/PLM/AG/KR


(रिलीज़ आईडी: 2032036) आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP