தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
திரு ஜோதிராதித்ய சிந்தியா அஞ்சல் துறையின் 100 நாள் செயல் திட்டத்தை ஆய்வு செய்தார்
Posted On:
09 JUL 2024 7:02PM by PIB Chennai
மத்திய தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம்.சிந்தியா, இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அஞ்சல் துறையின் 100 நாள் செயல் திட்டம் குறித்து விவாதித்தார். அவரது ஆற்றல்மிக்க தலைமை, வழிகாட்டுதலின் கீழ், அஞ்சல் துறை சேவை வழங்கலை மாற்றியமைப்பதையும், நாட்டிற்கும் அதன் குடிமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் முக்கிய முயற்சிகள் மூலம் செயல்திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு முக்கிய முயற்சியாக, அஞ்சல் துறை 100 நாட்களில் நாடு முழுவதும் 5,000 குறை தீர்ப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முயற்சி அரசு, குடிமக்களை மையமாகக் கொண்ட அத்தியாவசிய சேவைகளை நேரடியாக கிராமப்புறங்களுக்கு கொண்டு வருவதையும், அணுகல் வசதியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறிய அளவிலான ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதன் மூலம் கிராமப்புற ஏற்றுமதியை அதிகரிக்க தபால் அலுவலக ஏற்றுமதி மையத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி ஆவண உதவி, சந்தை தகவல், பார்-குறியீடு லேபிள் அச்சிடுதல், காகிதமற்ற சுங்க அனுமதி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குகிறது. 'ஒரு மாவட்டம் - ஒரு தயாரிப்பு' முன்முயற்சியுடன் இணைந்து, இந்தத் திட்டம் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2031864
***
PKV/RR/KR
(Release ID: 2032012)