சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் தேர்வுக்கு நேர்காணல்

Posted On: 09 JUL 2024 5:07PM by PIB Chennai

அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், தாம்பரம் கோட்டம், சென்னை -600 045 என்ற முகவரியிலுள்ள தாம்பரம் தலைமை அஞ்சலகத்தின் முதலாவது தளத்தில் 30.07.2024  அன்று காலை 11 மணிக்கு அஞ்சலக ஆயுள்  காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் கீழ்காணும்  தகுதிக்கான மூல சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் நேர்காணலில் பங்குபெறலாம்.

 தகுதிக்கான நிபந்தனைகள் :

  1. இந்திய கல்வி நிறுவன வாரியம் ஒன்றினால் அங்கீகரிக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு  அல்லது அதற்கு சமமான தேர்வில் விண்ணப்பதாரர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. நேர்காணல் நடைபெறும் தேதியில் விண்ணப்பதாரரின் வயது குறைந்த பட்சம் 18 ஆகவும் அதிகபட்சம் 50 ஆகவும் இருக்கலாம்.
  3. வேலைவாய்ப்பில்லாத, சுயவேலை செய்கின்ற இளைஞர்கள், ஏதாவது ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் மண்டல பணியாளர்கள், ஓய்வுபெற்ற  ஆசிரியர்கள், சுயஉதவி குழுக்கள், ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  4. இது அரசு வேலை அல்ல. முழுமையாக கமிஷன்  அடிப்படையிலான பணியாகும்.
  5. விண்ணப்பிக்கும் நபர் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் அங்கீகரிக்கப்பட்ட  முகவராக இருக்கக் கூடாது.
  6.  தேர்வு செய்யப்படுவோர் தேசிய சேமிப்பு சான்றிதழ் அல்லது  குடியரசு தலைவரின் பெயரில் உறுதியளிக்கப்பட்ட கிசான் விகாஸ் பத்திரம் வடிவில் ரூ.5,000 காப்பீட்டு தொகையாக செலுத்தவேண்டும். தற்காலிக உரி்ம கட்டணமாக ரூ. 50 செலுத்தவேண்டும்.
  7.  விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம், பான் அல்லது ஆதார் அட்டையின் நகல், கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை கொண்டுவரவேண்டும்.
  8.  பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.

****

 



(Release ID: 2031803) Visitor Counter : 7164


Read this release in: English