பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புப் படையினரின் வீர திரச் செயல்களுக்கான விருது - குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 JUL 2024 6:45PM by PIB Chennai

பாதுகாப்புப் படைகளில் பணிபுரிவோருக்கு, வீர தீர செயல்கள் புரிந்ததற்கான முதல் கட்ட விருது வழங்கும் விழா புதுதில்லியில் இன்று (05.07.2024) நடைபெற்றது. குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

ஆயுதப்படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகள், மாநில, யூனியன் பிரதேசக் காவல்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

10 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதுகளும், 26 பேருக்கு சௌர்ய சக்ரா விருதுகளும் வழங்கப்பட்டன.

இதில் ஏழு பேருக்கு மரணத்திற்குப் பிந்தைய கீர்த்தி சக்ரா விருதுகளும், ஏழு பேருக்கு மரணத்திற்குப் பிந்தைய சௌர்ய சக்ரா விருதுகளும் வழங்கப்பட்டன.

வெல்லமுடியாத துணிச்சல், கடமையில் தீவிர அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2031073

---- 

SMB/PLM/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2031126) வருகையாளர் எண்ணிக்கை : 140
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi