நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசுக் கடன் பத்திரத் தொகையை திரும்பச் செலுத்துதல்

Posted On: 04 JUL 2024 4:50PM by PIB Chennai

'8.40% அரசுக் கடன் பத்திரம் 2024' இன் கீழ் நிலுவையில் உள்ள இருப்பு ஜூலை 26, 2024 அன்று சமமாக திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட தேதியிலிருந்து அதற்கு வட்டி எதுவும் சேராது. ஆணை முறிச் சட்டம், 1881 இன் கீழ் எந்தவொரு மாநில அரசும் திருப்பிச் செலுத்தும் நாளில் விடுமுறை அறிவித்தால், கடன் / கடன்கள் அந்த மாநிலத்தில் உள்ள பணம் செலுத்தும் அலுவலகங்களால்முந்தைய வேலை நாளில் திருப்பிச் செலுத்தப்படும்.

பத்திரங்களைப் பொறுத்தவரை பணம் செலுத்தும் நோக்கத்திற்காக, அசல் சந்தாதாரர் அல்லது அத்தகைய அரசுப் பத்திரங்களைத் தொடர்ந்து வைத்திருப்பவர்கள், தங்கள் வங்கிக் கணக்கின் தொடர்புடைய விவரங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும்.

இருப்பினும், வங்கிக் கணக்கு பற்றிய உரிய விவரங்கள் / மின்னணு முறையில் நிதியைப் பெறுவதற்கான கட்டாயம் இல்லாத நிலையில், தவணைத் தேதியில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு வசதியாக, பொதுக் கடன் அலுவலகங்கள், கருவூலங்கள் / சார் கருவூலங்கள், பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் (அவை வட்டி செலுத்துவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள) 20 நாட்களுக்கு முன்னதாகக் கடன் பத்திரங்கள்  கோரப்படலாம்.

***

(Release ID: 2030747)

SMB/BR/RR


(Release ID: 2030903) Visitor Counter : 157