நிலக்கரி அமைச்சகம்
தனியார் மற்றும் வணிக நிலக்கரி சுரங்கங்களிலிருந்து நிலக்கரி உற்பத்தி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 35% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது
Posted On:
03 JUL 2024 6:33PM by PIB Chennai
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் 1, 2024 முதல் ஜூன் 30, 2024 வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி மற்றும் அனுப்புதலில் நிலக்கரி அமைச்சகம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை அடைந்துள்ளது.
நிலக்கரியின் உற்பத்தி கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 29.26 மில்லியன் டன்னாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 39.53 மில்லியன் டன்னாக 35% அதிகரித்துள்ளது. இதேபோல், விநியோகம் 34.25% வளர்ச்சியைக் காட்டியுள்ளது, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 34.07 மில்லியன் டன் என்ற அளவிலிருந்து நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 45.68 மில்லியன் டன்னாக இருந்தது.
நிலக்கரி உற்பத்தி:
மின் துறை:மின்சாரத் துறைக்கான உற்பத்தி கணிசமான அதிகரிப்பைக் கண்டுள்ளது, இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 25.02 மில்லியன் டன்னிலிருந்து இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 30.16 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது, இது ஆண்டுக்கு 20.5% வளர்ச்சியைக் குறிக்கிறது.
நிலக்கரி விற்பனை: நிலக்கரி சுரங்கங்களின் விற்பனையிலிருந்து உற்பத்தி அதிகரித்துள்ளது, கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 2.80 மில்லியன் டன்னிலிருந்து இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.81 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது, இது ஆண்டுக்கு 143% வளர்ச்சியாகும்.
நிலக்கரி அனுப்புதல்:
மின் துறை: மின்சாரத் துறைக்கான அனுப்புதல் கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 28.90 மில்லியன் டன்னிலிருந்து இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 35.65 மில்லியன் டன்னாக அதிகரித்து, ஆண்டுக்கு 23.3% வளர்ச்சியை அடைந்துள்ளது.
நிலக்கரி விற்பனை: கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 3.51 மில்லியன் டன்னிலிருந்து இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 7.64 மில்லியன் டன்னாக உயர்ந்தது, இது ஆண்டுக்கு 117.67% வளர்ச்சியாகும்.
நிலக்கரி உற்பத்தியை கணிசமாக அதிகரிப்பதும், அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலையான மற்றும் நம்பகமான விநியோகத்தை உறுதி செய்வதும் அமைச்சகத்தின் முதன்மைக் குறிக்கோளாகும். கூட்டு முயற்சிகள் மற்றும் இலக்கு ஆதரவு மூலம், நிலக்கரித் துறையில் செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் உற்பத்தியை மேம்படுத்துவதை அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
(Release ID: 2030485)
PKV/BR/AG/RR
(Release ID: 2030602)
Visitor Counter : 57