நிதி அமைச்சகம்
பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை வலுப்படுத்த மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் 170 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
प्रविष्टि तिथि:
02 JUL 2024 9:47PM by PIB Chennai
எதிர்கால பெருந்தொற்றுகளுக்கு இந்திய சுகாதார அமைப்புமுறையின் தயார்நிலையை ஒருங்கிணைக்கவும் வலுப்படுத்தவும் மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் (ஏ.டி.பி) 170 மில்லியன் டாலர் கொள்கை அடிப்படையிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
'நெகிழ்திறன் மற்றும் உருமாறும் சுகாதார அமைப்புகளுக்கான வலுப்படுத்தப்பட்ட மற்றும் அளவிடக்கூடிய நடவடிக்கைகள் (துணைத் திட்டம் 1)' திட்டத்தில் மத்திய அரசின் சார்பில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் இணைச் செயலாளர் திருமதி ஜூஹி முகர்ஜி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குநர் திருமதி மியோ ஓகா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள்.
கொவிட்-19 பெருந்தொற்றின் போது, அரசு அதன் பெருந்தொற்றின் தயார்நிலை மற்றும் எதிர்கொள்ளும் திறனை கணிசமாக வலுப்படுத்த பல நடைமுறைகளைப் பின்பற்றியது என்று திருமதி முகர்ஜி கூறினார். நோய் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், சுகாதார நிபுணர்களின் தன்னிறைவு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்கும், பருவநிலை-நெகிழ்திறன் கொண்ட பொது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் அரசின் தற்போதைய முயற்சிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி திட்டம் உதவும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2030329
***
PLM/BR/KV
(रिलीज़ आईडी: 2030362)
आगंतुक पटल : 112