பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

தேசிய கிராமப்புற தன்னாட்சி இயக்கத்தின் கீழ் மாநில ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் மாநில திட்ட மேலாளர்களுக்கான ஐந்து நாள் புத்தாக்கப் பயிற்சித் திட்டத்தை செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்

Posted On: 01 JUL 2024 5:59PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் தேசிய கிராமப்புற தன்னாட்சி இயக்கத்தின் கீழ், மாநில ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் மாநில திட்ட மேலாளர்களுக்கான ஐந்து நாள் புத்தாக்கப் பயிற்சியை பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அர்ப்பணிப்பு மற்றும் தரமான பணிகள் மூலம் கிராமப்புற வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர பங்கேற்பாளர்களின் அவசியத்தை வலியுறுத்தினார். பங்கேற்பாளர்கள் தங்களது ஆற்றலை அங்கீகரித்து, மக்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு, சிறப்பாக செயல்பட பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் அடிமட்ட அளவில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வரத் தேவைப்படும் அளப்பரிய மனித ஆற்றல், உறுதிப்பாடு மற்றும் ஆர்வமுள்ள அபிலாஷை ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.

"பஞ்சாயத்துகளில், வளங்களுக்கும் நிதிக்கும் பஞ்சமில்லை; திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி முன்முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் செய்யப்படுகின்றன. இந்த முயற்சிகளின் நேர்மறையான விளைவுகளை களத்தில் காண்பதே உண்மையான தேவை" என்று திரு பரத்வாஜ் வலியுறுத்தினார்.

மத்திய நிதிக்குழுவின் மானியத்துடன் தொடங்கப்படும் திட்டங்களைத் தொடங்கி வைத்து, பரவலான அங்கீகாரத்தைப் பெறுவது மட்டுமின்றி, மற்ற பஞ்சாயத்துகளுக்கும் ஊக்கமளிக்கும் என்று திரு விவேக் பரத்வாஜ் வலியுறுத்தினார். ஸ்வமித்வா திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமும், சொத்து வரி வசூல் செயல்முறையை சொந்த மூல வருவாய் முயற்சிகளுடன் சீரமைத்து, பஞ்சாயத்துகளின் வருமானத்தை அதிகரிக்க வழி வகுக்க முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.

***

(Release ID: 2030055)

PKV/AG/RR



(Release ID: 2030180) Visitor Counter : 7