மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

ஆர்ம் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங் செயலி ஏயூஎம் வடிவமைப்பு

Posted On: 01 JUL 2024 6:22PM by PIB Chennai

மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் சி-டாக்,, சோஷியோநெக்ஸ்ட் உடன் கூட்டு சேர்ந்து, ஆர்ம் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட உயர் செயல்திறன்-கம்ப்யூட்டிங் செயலியை வடிவமைத்துள்ளது.

இந்தியாவில் அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தை உருவாக்கி பயன்படுத்துவதற்காக நிறுவப்பட்ட சி-டாக், அதன் முழுமையான உள்நாட்டுமயமாக்கலை நோக்கி செயல்பட்டு வருகிறது. இந்த திசையில் உள்நாட்டு கணினி முனை  ருத்ரா, டிரிநேத்ரா-இன்டர்கனெக்ட், சிஸ்டம் மென்பொருள் ஸ்டேக் ஆகியவற்றை உருவாக்கியுள்ளது.

உயர் செயல்திறன் கொண்ட ஆர்ம் நியோவெர்ஸ் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த உள்நாட்டு செயலி ஏயூஎம்-ன் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக இந்தியாவின் மோஸ்சிப் டெக்னாலஜிஸ் மற்றும் ஜப்பானின் சோஷியோநெக்ஸ்ட் கூட்டமைப்புடன் சி-டாக் ஒத்துழைக்கிறது.  

நிகழ்ச்சியில் பேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ்.கிருஷ்ணன், "சேவையக முனைகள், இன்டர்கனெக்ட்கள் மற்றும் சிஸ்டம் சாஃப்ட்வேர் ஸ்டேக் மூலம் நமது உள்நாட்டுமயமாக்கல் முயற்சிகள் 50%-க்கும் அதிகமாக எட்டியுள்ளன. இப்போது முழுமையான உள்நாட்டுமயமாக்கலுக்காக, உள்நாட்டு எச்பிசி செயலி  ஏயூஎம்- ஐ உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று கூறினார்.

***

(Release ID: 2030068)

PKV/AG/RR


(Release ID: 2030179) Visitor Counter : 67


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP