புவி அறிவியல் அமைச்சகம்
2024 ஜூலை மாதத்திற்கான மழைப் பொழிவு, வெப்பநிலை குறித்த மாதாந்தரக் கண்ணோட்டம்
Posted On:
01 JUL 2024 6:45PM by PIB Chennai
இந்தியாவில் மழைப்பொழிவு ஜூலை 2024-ல் மாதாந்தர மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் (குறைந்த காற்றழுத்தப் பகுதியில் 106% அதிகம்). ஜூலை மாதத்தில், வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகள், வடமேற்கு, கிழக்கு, தென்கிழக்கு தீபகற்ப பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான மழை பெய்யக்கூடும்.
தரைப்பகுதி காற்று வெப்பம் - 2024 ஜூலை மாதத்தில், மத்திய இந்தியாவின் வடமேற்கு, அதையொட்டிய பகுதிகள், தென்கிழக்கு தீபகற்பத்தின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பல பகுதிகளில் மாதாந்தர குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். மேற்கு கடற்கரை தவிர வடமேற்கு இந்தியா மற்றும் தெற்கு தீபகற்பத்தின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விடக் குறைவாக இருக்கும். நாட்டின் மத்திய கிழக்கு, வடகிழக்கு, மேற்குக் கடற்கரையின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும்.
கடல் பரப்பு காற்று வெப்பம் - பூமத்திய ரேகை மேற்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலில் கடல் பரப்பு வெப்பநிலை சராசரியை விட அதிகமாகவும், கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் சராசரிக்கும் குறைவாகவும் உள்ளது.
இந்தப் பருவ காலத்தின் இரண்டாவது பகுதி, 2024, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான மழைப்பொழிவுக் குறித்த முன்னறிவிப்பை 2024 ஜூலை இறுதியில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும்.
****
SMB/IR/KPG/DL
(Release ID: 2030109)
Visitor Counter : 79