வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தொழில்துறை பங்களிப்பாளர்கள் மற்றும் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்துரையாடினார்
Posted On:
01 JUL 2024 5:35PM by PIB Chennai
தொழில்துறை பங்களிப்பாளர்கள் மற்றும் தலைவர்களுடன் ஹைதராபாதில் 2024, ஜூன் 30 அன்று மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, தெலங்கானா மாநில தொழில் துறை அமைச்சர் திரு டி ஸ்ரீதர் பாபு ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடல் நிகழ்வில், பெண் தொழில் முனைவோர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், வர்த்தக சபை, தொழில்துறை சங்கங்கள், ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், பொருள் போக்குவரத்து, தோல் மற்றும் காலணிகள் தயாரிப்பு போன்ற பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட 200-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
வணிக வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கு சுமூகமான சூழலை உருவாக்கும் மத்திய அரசின் உறுதிப்பாடுகளை இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எடுத்துரைத்தார். தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ளவும், கொள்கை உருவாக்கத்தில் அவர்களின் பின்னூட்டங்களை சேர்க்கவும், இத்தகைய கலந்துரையாடல் நிகழ்வு அவசியமானது என்று அவர் கூறினார்.
பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்கேற்பின் மூலம், நீடித்த பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப சாதனையை எட்டமுடியும் என்று இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2030037
***
SMB/RS/DL
(Release ID: 2030087)
Visitor Counter : 62