சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி - டேராடூன் விரைவுச் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா நேரில் ஆய்வு செய்தார்

प्रविष्टि तिथि: 29 JUN 2024 7:58PM by PIB Chennai

மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா 29.06.2024 அன்று, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுடன் தில்லி - டேராடூன் விரைவுச்சாலைப் பணகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் பகுதிகளில் நீர் தேங்கும் பிரச்சினை மற்றும் இந்த தேசிய நெடுஞ்சாலை தொடர்பான பிற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அவர் ஆய்வு செய்தார்.

தில்லி - டேராடூன் அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த அமைச்சர், கிழக்கு தில்லியின் காந்தி நகர் பகுதியில் நெரிசலைக் குறைப்பதில் இந்த அதிவேக நெடுஞ்சாலை முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். 

தில்லி மீரட் விரைவுச்சாலையின் நெரிசலையும் இந்த விரைவுச் சாலை குறைக்கும் என்று அவர் தெரிவித்தார்.  இந்த அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

***

AD/PLM/KV


(रिलीज़ आईडी: 2029660) आगंतुक पटल : 93
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी