வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

எட்டு முக்கியத் தொழில்துறைகளின் ஒருங்கிணைந்த குறியீடு 2024 மே மாதத்தில் 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது


மின்சாரம், நிலக்கரி, எஃகு, இயற்கை எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தி சாதனை அளவாக உயர்ந்துள்ளது

Posted On: 28 JUN 2024 5:00PM by PIB Chennai

எட்டு முக்கியத் தொழில்துறைகளின் ஒருங்கிணைந்த குறியீடு 2023 மே மாத குறியீட்டுடன் ஒப்பிடுகையில் 2024 மே மாதத்தில் 6.3 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது.

மின்சாரம், நிலக்கரி, எஃகு, இயற்கை எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தி சாதனை அளவாக  உயர்ந்துள்ளது.

2024 பிப்ரவரி மாதத்திற்கு எட்டு முக்கியத் தொழில்துறைகளின் ஒருங்கிணைந்த குறியீட்டின் இறுதி வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக இருந்தது. கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்துடன் ஒப்பிடுகையில், 2024-25 காலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக (தற்காலிகமானது) இருந்தது.

எட்டு முக்கியத் தொழில்துறைகளின் குறியீட்டு  விவரம் வருமாறு:

சிமெண்ட் உற்பத்தி 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்தில் பூஜ்யம் புள்ளி  8 சதவீதம் குறைந்துள்ளது.

நிலக்கரி உற்பத்தி 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்தில் 10.2 சதவீதம்  அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்தில், 1.1 சதவீதம் குறைந்துள்ளது.

மின்சார உற்பத்தி 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்தில்,  12.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

உரங்கள் உற்பத்தி 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்தில் 1.7 சதவீதம் குறைந்துள்ளது.

இயற்கை எரிவாயு உற்பத்தி 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்தில் 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட  பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்தில்  பூஜ்யம் புள்ளி 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

எஃகு உற்பத்தி 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்தில்7.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

2024 ஜூன் மாதத்திற்கான குறியீடு 2024 ஜூலை 31 அன்று வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2029320

***  

SMB/KPG/RR/DL



(Release ID: 2029349) Visitor Counter : 48


Read this release in: English , Urdu , Hindi , Manipuri