வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

அம்ருத், பொலிவுறு நகரங்கள் இயக்கம், பிரதமரின் வீட்டுவசதி திட்டம்-நகர்ப்புறம் ஆகியவற்றின் 9-வது ஆண்டு விழாவை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாடியது

Posted On: 25 JUN 2024 6:30PM by PIB Chennai

அடல் புத்தாக்கம் மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான (அம்ருத்) இயக்கம், பொலிவுறு நகரங்கள் இயக்கம் மற்றும் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் ஆகிய மூன்று முக்கிய முயற்சிகளின் 9-வது ஆண்டு நிறைவை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இன்று கொண்டாடியது. 2015-ம் ஆண்டு ஜூன் 25, அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இந்த முன்முயற்சிகள், நகர்ப்புற உள்கட்டமைப்பை கூட்டாக மாற்றியமைத்து, இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த அம்ருத் கூடுதல் செயலாளர் திருமதி டி.தாரா, பிரதமர் வீட்டு வசதித் திட்டம்-(நகர்ப்புறம்) இணைச் செயலாளர் திரு. குல்தீப் நாராயண் ஆகியோர் அந்தந்த இயக்கங்களின் தொடக்கத்திலிருந்து அவற்றின் முன்னேற்றம் குறித்து கோடிட்டுக் காட்டினர். அம்ருத் திட்டங்களை அடிமட்டத்தில் செயல்படுத்துவதில் திறன் மேம்பாடு, பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஈடுபாடு ஆகியவற்றை திருமதி தாரா வலியுறுத்தினார்.

அம்ருத்: நிலையான நகர்ப்புற உள்கட்டமைப்பு முன்னோடி

அம்ருத் அதன் தொடக்கத்திலிருந்து, குடிமக்களுக்கு சேவை வழங்குவதை நேரடியாக மேம்படுத்தும் உள்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அசல் பணியின் நீட்டிப்பான அம்ருத் 2.0, குடிநீர் வழங்கல், கழிவுநீர் மேலாண்மை, நீர்நிலை புத்துயிரூட்டல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் முக்கிய சாதனைகள்:

· மொத்த திட்டங்கள்: 8200

· மொத்த திட்ட செலவு: ரூ.182,583.07 கோடி

· குடிநீர் வழங்கல்: 3530 திட்டங்கள், ரூ.112,530.1 கோடி

· கழிவுநீர் மற்றும் கசடு மேலாண்மை: 562 திட்டங்கள், ரூ.63,790.57 கோடி

· நீர் நிலை புனரமைப்பு: 2709 திட்டங்கள், ரூ.5420.5 கோடி

· பூங்காக்கள் மேம்பாடு: 1399 திட்டங்கள், ரூ.841.91 கோடி

· அம்ருத் மித்ரா: 350-க்கும் அதிகமான மகளிர் சுய உதவிக் குழுக்களை நீர்த்துறை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல்.

· நிலத்தடி மேலடுக்கு நீர்த்தாங்கி மேலாண்மைத் திட்டம்: மேம்படுத்தப்பட்ட பசுமைப் பரப்பு மற்றும் நகர்ப்புற வெள்ளத் தணிப்பு.

· இளைஞர் இணைப்பு திட்டம்: நீர்நிலைகளை ஆய்வு செய்வதில் குறிப்பிடத்தக்க மாணவர் மற்றும் ஆசிரியர்களின் பங்கேற்பு.

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் (நகர்ப்புறம்): 'அனைவருக்கும் வீடு' என்ற கனவை நனவாக்குதல்

இத்திட்டம் 2015 ஜூன் 25 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் 'அனைவருக்கும் வீடு' என்ற தொலைநோக்குடன் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற இந்தியாவின் தகுதியான பயனாளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய அனைத்து வானிலைக்கும் பொருத்தமான, உறுதியான வீடுகள் வழங்கப்படுகின்றன. அதன் ஒன்பது வருட பயணத்தில், இத்திட்டம்  கோடிக் கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.  

பொலிவுறு நகரங்கள் இயக்கம்: நகர்ப்புற கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்

பொலிவுறு நகரங்கள் இயக்கம் நகர்ப்புற மாற்றத்தின் கலங்கரை விளக்கமாக உள்ளது, சுமார் ரூ.1.6 லட்சம் கோடி மதிப்புள்ள 8,000 க்கும் மேற்பட்ட புதுமையான திட்டங்கள் மூலம் 100 நகரங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது.

2024, ஜூன் 25  நிலவரப்படி, ரூ. 1,43,778 கோடி மதிப்புள்ள 7,160 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன,ரூ.20,392 கோடி மதிப்புள்ள மேலும் 854 திட்டங்கள் நிறைவடையும் நிலையில் உள்ளன. மத்திய அரசு 100 நகரங்களுக்கு ரூ.46,387 கோடியை விடுவித்துள்ளது. மத்திய அரசு விடுவித்த நிதியில் 93 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2028584

***

SMB/PKV/AG/KV



(Release ID: 2028809) Visitor Counter : 14


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP