சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பசுமையான தில்லியை உருவாக்க நடப்பு நிதியாண்டில் 4.5 கோடி மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகளை நட காற்றுத் தர மேலாண்மை ஆணையம் இலக்கு

प्रविष्टि तिथि: 26 JUN 2024 1:10PM by PIB Chennai

தேசியத் தலைநகர் தில்லியின் திறந்த வெளிப்பகுதிகளில், அதிக அளவில் மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகளை நட காற்றுத்தர மேலாண்மை ஆணையம்  முடிவு செய்துள்ளது. தூசியைத் தணித்து காற்றின் தரத்தை அதிகரிப்பதற்கு சிறந்த வழிமுறையாக  அடையாளம் காணப்பட்டுள்ளது.  

தேசிய தலைநகர் பகுதியின் பசுமைப் பரப்பை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் காற்று தர மேலாண்மை ஆணையம் மேற்கொண்டுள்ளது. தேசிய தலைநகர் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இதற்கான முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தேசிய தலைநகர் பகுதியை உள்ளடக்கிய தில்லி, ஹரியானாவின்  சில மாவட்டங்கள், ராஜஸ்தானின் சில மாவட்டங்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சில மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

2021-22-ம் ஆண்டில் 28,81,145 புதிய மரக்கன்றுகள் மட்டுமே நடப்பட்ட நிலையில், 2022-23-ம் ஆண்டில் என்சிஆர் பகுதியில் 3,11,97,899 புதிய மரக்கன்றுகள் நடப்பட்டன. 2023-24-ம் ஆண்டில் சுமார் 3.6 கோடி புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது. நடப்பு நிதியாண்டான 2024-25-ம் ஆண்டில் சுமார் 4.5 கோடி மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. தில்லியில் 56.40 லட்சம் மரக்கன்றுகளும், ஹரியானாவில்    1.32 கோடி மரக்கன்றுகளும், உத்தரப்பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 1.97 கோடி மரக்கன்றுகளும் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2028729

------

SMB/PLM/KPG/KV


(रिलीज़ आईडी: 2028796) आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Telugu